சென்னை மாநகராட்சி திருமண மண்டபங்களுக்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடக்கம்

சென்னை மாநகராட்சி திருமண மண்டபங்களுக்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி தலைமையகம் வசம் இருந்த திருமண மண்டபங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மண்டலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து பொதுமக்களே ஆன்லைனில் திருமண மண்டபங்களை முன்பதிவு செய்யும் வசதி விரைவில் தொடங்கப்படும். 24 மணி நேரமும் முன்பதிவு செய்யலாம். ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்தலாம்.  
புதிய நடைமுறையால் ரிப்பன் மாளிகைக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது. வங்கிகளுக்கு சென்று வரைவோலை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *