ஊராட்சிகளிலும் ஆன்லைனில் கட்டிட அனுமதி

ஊராட்சிகளிலும் ஆன்லைனில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

பத்தாயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதில் ஊராட்சிகளுக்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநகராட்சி, நகராட்சிகளில் அமலில் உள்ள ஆன்லைன் திட்டத்தை ஊராட்சிகளிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் வாயிலாகவே கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *