சாலையோர ஓட்டல் வியாபாரிகளுக்கு ஆன்லைன் பயிற்சி

சாலையோர ஓட்டல் வியாபாரிகளுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது.

சாலையோர வியாபாரிகள் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

முதல்கட்டமாக சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக ஒவ்வொரு நகரத்தில் இருந்து முதல்கட்டமாக 50 சாலையோர வியாபாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையிலும் 50 வியாபாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பான் எண் வாங்குவது, உரிய தரத்துடன் உணவுகளை சமைப்பது, செயலியை பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இந்திய உணவு தர நிர்ணய அமைப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *