மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழை இணையம் மூலம் வழங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக தங்களது சான்றிதழ்களை பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.