கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடரும்…

கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடரும்… என்று அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

“தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையும் வரை இந்த கல்வியாண்டில் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடரும்” என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *