அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அரசாணை ரத்து செய்யப்பட்டது.
தற்போதைய நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால் அவர்களிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை.
இதன்காரணமாக ஆன்லைன் வகுப்புக்கு சாத்தியமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுரைகள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.