சி.ஏ. படிப்புக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்கம் சார்பில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சி.ஏ. அடிப்படை பாடப்பிரிவில் சேர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்காக ஆன்லைன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் 5 மணி நேரம் வீதம் ஞாயிறு தவிர்த்த வாரத்தில் 6 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு ரூ.9,500 கட்டணமாகும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை அணுகலாம் என்று தென்னிந்திய பட்டாய கணக்காளர் சங்கம் தெரிவித்துள்ளது.