ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்க 24 மணி நேரத்தில் புகார் அளிக்க வேண்டும்

வங்கியில் இருந்து பேசுகிறோம். வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும். நெட்பேங்கிங் முறையை அப்டேட் செய்ய வேண்டும் என்று மர்ம கும்பல்கள் ஆன்லைன் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கும்பலிடம் ஏடிஎம் எண்ணின் ரகசிய குறியீட்டு எண், ஓடிபி எண்ணை தெரிவித்து பணத்தை பறிகொடுத்தோர் பதற வேண்டாம். ஸ்மார்ட் போன் வாயிலாக வீட்டிலோ அல்லது வேறு இடத்தில் இருந்தபடியோ கட்டணமில்லை 155260 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும்.
இந்த எண்ணுக்கு 24 மணி நேரத்துக்குள் புகார் அளித்தால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்குக்கு மாற்றிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் செய்துவிடலாம். காலதாமதமாக புகார் செய்தால் பணத்தை திரும்ப பெறுவது கடினம். www.cybercrime.gov.in என்ற இணையம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என்று சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *