பட்டா மாறுதலுக்காக பொதுமக்கள் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பட்டா மாறுதலை எளிமையாக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக பத்திரப் பதிவு மென்பொருளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, பத்திரப்பதிவின்போதே தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்யும் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
வரும் 1-ம் தேதி முதல் இந்த தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை அனைத்து தாலுகாக்களும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பதிவுத் துறை தீவிரமாக செய்து வருகிறது.