ஆன்லைன் ரம்மி தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

ஆன்லைன் ரம்மி தடையை நீக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றியது. 

இந்த சட்டத்தை எதிர்த்து ஜங்லி கேம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ரம்மி விளையாட்டு சூதாட்டம் இல்லை என்று ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அவசர சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *