ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம்.. ஐகோர்ட்டில் அரசு உறுதி…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கல் அதிகரித்து வருகின்றன. எனவே ரம்மி  உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்  கூறும்போது‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?’’ எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ‘‘சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என்பதால் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்படும் என முதல்வர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அதை தடை செய்ய அதிக முக்கியத்துவம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்றப்படும். விரைவில் சட்ட மசோதா தயார் செய்யப்படும்’ எனத் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *