கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு

கடந்த கல்வியாண்டில் கலைக் கல்லூரிகளில் 2, 4, 6-வது செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் இந்த செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 17-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் முதல்கட்டமாக 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தொடங்க வாய்ப்புள்ளது. ஆக. 1-ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையும் ஆன்லைன் வகுப்பும் தொடங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *