வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்க விரும்புவோர், www.elections.tn.gov.in அல்லது www.nvsp.in அல்லது https://voterportal.eci.gov.in அல்லது செல்போன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.

18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்போது வண்ண புகைப்படத்தை இணைக்க வேண்டும்.

ஒரே தொகுதிக்குள் இருப்பிடம் மாறினால் படிவம் 8ஏ, தொகுதி விட்டு தொகுதி மாறியவர்கள் படிவம் 6, திருத்தம் செய்ய படிவம் 8, புதிய வாக்காளர் அட்டை பெற படிவம் 001 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுவாழ் தமிழர்கள் 6ஏ படிவம் மூலம் பெயர் சேர்க்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *