செப். 1-ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான அறிவிப்பினை வெளியிட்டார்.
“கொரோனா வைரஸ் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் செப். 6-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. செப். 1 முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை சுழற்சி அடிப்படையில் செயல்படும். அனைத்து கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும் செப். 1 முதல் சுழற்சி முறையில் செயல்படும்.  அங்கன்வாடி மையங்கள் செப். 1 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *