மருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ்…

மருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ்… அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்தது.

தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் (வயது 69) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதா என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த தகவல்களை மருத்துவமனை வட்டாரங்கள் மறுத்தன. வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனைகள் முடிந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் விளக்கம் அளித்தன.

இதன்படி மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு ஓபிஎஸ் வீட்டுக்கு திரும்பினார்.
கடந்த 25-ம் தேதியும் இதே தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டார். அன்றைக்கே அவர் வீடு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *