ஆன்லைன் மூலம் மீன்களை ஆர்டர் செய்யும் வசதி சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
விருகம்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, பெருங்குடி, தரமணி, துரைப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மீன் விற்பனை கடைகள் செயல்படுகின்றன.
இந்த கடைகளை சுற்றி 5 கி.மீ. தொலைவில் வசிப்பவர்கள் meengal என்ற செயலி, www.meengal.com இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக மீன் விநியோகம் செய்யப்படுகிறது. ஆன்லைன் மீன் விநியோக திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த திட்டம் சென்னை முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.