இந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களிலும் காஸ் சிலிண்டர் பெற ரகசிய எண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும்போது செல்போன் ரகசிய எண் மூலம் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதே திட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.), பாரத் பெட்ரோலியமும் (பாரத்) தொடங்கி உள்ளதாக அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.