சென்னை ஐடி வளாகத்தில் ஆக்ஸிஜன் பூங்கா

சென்னைக்கு அருகே சிறுசேரியில் 1,000 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் முன்பகுதியில் உள்ள அரை ஏக்கர் திறந்தவெளியில் ஆக்ஸிஜன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றும் 1,300 பீமா மூங்கில் மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த பூங்கா வழியாக ஐடி ஊழியர்கள் கடந்து செல்லும்போது சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்க முடியும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து மண்டலங்களிலும் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக சென்னையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *