பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத் அருகே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 4.2 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன. பெரிய அளவில் பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களில் அண்மைக்காலமாக மிதமான அளவில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்த்துவதாக புவியியல் வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.