இந்தியாவுக்கு எதிராக வைரஸ் யுத்தம்? சீனா, பாகிஸ்தான் ரகசிய ஒப்பந்தம்

அணு குண்டுகளைவிட ஆபத்தானவை பயோ வெப்பன் என்றழைக்கப்படும் உயிரி ஆயுதங்கள். அதாவது எதிரி நாடுகளின் மீது வைரஸ் உள்ளிட்ட கொடிய கிருமிகளை ஏவி தாக்குதல் நடத்துவதாகும். இந்த போரில் எதிரி நாடுகளின் வீரர்கள், மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கொத்து, கொத்தாக மடிவார்கள்.


பயோ வெப்பனுக்கு எதிராக உலகம் முழுவதும் மனித உரிமை அமைப்புகளும், மனிதாபிமான நாடுகளும் உரக்க குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் சீனா எதையும் கண்டுகொள்ளாமல் கொடிய பயோ வெப்பன்களை தயாரித்து வருகிறது.

பயோ வெப்பனில் இருந்து பாதுகாத்து கொள்ள அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு கவச உடை பயன்படுத்துகின்றனர்.
பயோ வெப்பனில் இருந்து பாதுகாத்து கொள்ள அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு கவச உடை பயன்படுத்துகின்றனர்.


குறிப்பாக சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் செயல்படும் வைராலஜி ஆய்வகத்தில் இத்தகைய கொடூர பயோ வெப்பன்கள் தயாரிக்கப்படுவதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இப்போது உலகை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸின் பிறப்பிடமும் இந்த வூஹான் நகரம்தான்.


அங்குள்ள வைராலஜி ஆய்வகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொரோனா வைரஸே மனிதர்களுக்கு பரவி உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. ஆய்வகத்தில் கருவாகி, உருவான வைரஸ் என்பதால் அதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் வாதிட்டு வருகின்றனர்.

சீனாவின் வூஹான் நகரில் செயல்படும் வைராலஜி ஆய்வகம்.
சீனாவின் வூஹான் நகரில் செயல்படும் வைராலஜி ஆய்வகம்.


இந்த பின்னணியில் சீனாவும் பாகிஸ்தானும் அண்மையில் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை செய்துள்ளன. இதன்படி பாகிஸ்தான், பயோ வெப்பன்களை தயாரிக்க வூஹான் ஆய்வகம் உதவி செய்யும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.


பாகிஸ்தான் பயோ வெப்பன்களை தயாரித்தால் அந்த ஆயுதங்கள் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்துவது நிச்சயம். எனவே சர்வதேச நாடுகளோடு இணைந்து சீனா, பாகிஸ்தானின் ஆட்டத்துக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் இடியாப்ப சிக்கலாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *