தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பனை மரம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
“பனை நம் மாநில மரம். இதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன்படுகிறது. மனை மரத்தில் ஒருவகை கூந்தல் பனை. அதை தாளிப்பனை என்றும் அழைப்பார்கள். இதன் ஓலையை தமிழர்கள் எழுத பயன்படுத்தினர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது” என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.