பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கதலுக்கான 10 இலக்க பான் எண்ணுடன், 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்க கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிப்பு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 30-ம் தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
எனவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வருமான வரித் துறை இன்று வெளியிட்டது.