ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டில் வெளிவந்த படம் பாபநாசம். இந்த படத்தில் கமலுக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகளாக நடித்தவர் எஸ்தர் அனில்.
கடந்த 2010-ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான நல்லவன் படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எஸ்தர் தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். கடந்த 2016-ம் ஆண்டில் கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதையும் பெற்றார்.
கடந்த 2001 ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்த எஸ்தருக்கு தற்போது 18 வயதாகிறது. குழந்தை நட்சத்திரத்தில் இருந்து கதாநாயகியாக நடிக்க அவர் தயாராகி வருகிறார். தற்போது மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் அவர், தனது புதிய புகைப்படங்கள், வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார். பாபநாசம் படத்தில் நடித்த சிறுமியா என்ற ஆச்சரியப்படும் வகையில் சேலையில் எஸ்தர் அனில் மின்னுகிறார். பாலிவுட்டிலோ, மோலிவுட்டிலோ அல்லது கோலிவுட்டிலோ விரைவில் அவர் முன்னணி கதாநாயகியாக அவதாரம் எடுப்பது உறுதி என்பது தெளிவாகிறது.