கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மெடிக்கல் கடைகளில் டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் கொடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு விளக்கம் அளித்தது.
அதில் பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வழங்கக்கூடாது என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தது.
அரசு தரப்பு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மருத்துவர் சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரை தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.