பார்சல் சர்வீஸ் கட்டணம் 20% உயர்வு

தமிழகத்தில் பார்சல் சர்வீஸ் கட்டணம் 20% உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்கள், வெளிமாநிலங்கள் இடையே பார்சல் மாற்றத்துக்காக 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்த நிறுவனங்களின் சார்பில் சுமார் 1,000 லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

லாரிகளுக்கு 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை, காலாண்டு வரி, டீசல் விலை உயர்வு, டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் உயர்வு, தொழிலாளர்களின் சம்பள உயர்வாக பார்சல் கட்டணம் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல கூரியர் நிறுவனங்கள் 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *