குறுகிய தொலைவு பயணிகள் ரயில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. எனினும் வழக்கமான ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. பயணிகள் ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் குறுகிய தொலைவு செல்லும் பயணிகள் ரயில்களின் கட்டணம் கடந்த வியாழக்கிழமைமுதல் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் தவிர்க்க 3 சதவீத மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.