கொரோனாவுக்கு மருந்தா? பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

பதஞ்சலி நிறுவனம் அண்மையில் கொரோனில் என்ற மருந்தை அறிமுகம் செய்தது. இந்த மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்யப்பட்டது.


இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஆருத்ரா இன்ஜினீயர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


இதனை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தார். இந்த நிதியை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு சரிசமமாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *