தரமற்ற உணவு வகைகளை விற்பனை செய்த 3 ஓட்டல்களுக்கு அபராதம்

சென்னை மாநகராட்சி பகுதி ஓட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்ய மண்டலவாரியாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையின் 45 பகுதிகளில் 155 ஓட்டல்களில் ஆய்வு செய்தது.
அப்போது 61 ஓட்டல்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஓட்டல்களில் வழிமுறைகளை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 8 ஓட்டல்களில் 16 கிலோ ஆரோக்கியமற்ற உணவு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 3 ஓட்டல்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *