தரமற்ற இனிப்புகள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்

தரமற்ற இனிப்புகள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

தீபாவளியை ஒட்டி இனிப்பு, கார வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் இனிப்பு, கார வகைகளை தயாரிப்போருக்கு உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

திருமண மண்டலம், தனியார் உணவு கூடங்கள், சமூக நலக் கூடங்கள் ஆகியவற்றில் பண்டிகை கால இனிப்பு, கார வகைகள் தயாரிப்போர் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அங்கு பணியாற்றுவோர் கையுறைகள், தலைக்கவசம், மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.

இனிப்பு கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தும் நீரின் தரத்தை அறிய பகுப்பாய்வு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது.

பேக்கிங் செய்து அனுப்பும் உணவு பொருட்களின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை அச்சிட வேண்டும். 

இனிப்பு, கார வகைகள் தரமாக இல்லை என்றால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *