பத்திரப்பதிவு ஆவணங்களை பொதுமக்களே உருவாக்கலாம் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பதிவுத் துறையின் இணையதளமான www.tnreginet.gov.in இணையதளம் வாயிலாக பொதுமக்களே பத்திரப் பதிவு ஆவணங்களை உருவாக்கலாம்.
இணையதளத்தில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இறுதியில் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் திரையில் தோன்றும். இணையம் வாயிலாகவே கட்டணம் செலுத்தலாம். இதனை பிரதி எடுத்து சரி பார்த்து கொள்ளலாம். தவறான விவரங்களை இணையத்தில் சென்று திருத்திக் கொள்ளலாம் என்று பதிவுத் துறை அறிவித்துள்ளது.