சென்னையில் கொரோனா வார்டை அகற்றக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் அத்திப்பட்டு கலைவாணர் நகரில் 19 அடுக்கு மாடிகளை கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் 11 பிளாக்குகளில் 2,394 வீடுகள் உள்ளன. இதில் உள்ள வீடுகளில் 822 பேர் வசிக்கின்றனர்.
கடந்த 22-ம் தேதி காலியாக உள்ள வீடுகளில் கொரோனா வார்டுகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் அமைத்தனர். 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வார்டுகளை அகற்றாவிட்டால் வீடுகளை காலி செய்வோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அதிகாரிகளின் சமரசத்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.