இரவு 10 வரை பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதன்படி தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுகின்றன.
பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று தமிழகத்தில் இரவு 10 வரை பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “இப்போது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் பெட்ரோல் பங்குகள் இனிமேல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.