முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக், எம்.பார்ம், எம்.ஆர்க். படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற இணைய வழியல் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு மாணவர்கள் கேட் தேர்வு அல்லது ஜிபேட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். முழுநேர முதுநிலைப் படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும்.
https://www.aicte-india.org/schemes/students-development-schemes/PG-scholarship-Scheme
என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 01126131576, 01126131578, 01126131580 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.