பிலிப்பைன்ஸ் விமான விபத்து; 45 பேர் பலி – உயிர்தப்பியவர்கள் அதிர்ச்சி தகவல்

பிலிப்பைன்ஸ் விமானப்படை விமான விபத்தில் 45 பேர் உயிரிழந்த தகவல் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்தவர்களில் பலர், சமீபத்தில்தான் பயிற்சி பெற்று விமானப்படையில் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் விமான விபத்து
First responders work at the site after a Philippines Air Force Lockheed C-130 plane carrying troops crashed on landing in Patikul, Sulu province, Philippines July 4, 2021. Armed Forces of the Philippines – Joint Task Force Sulu/Handout via REUTERS

பிலிப்பைன்ஸ் விமானப்படைக்குச் சொந்தமான சி 130 என்ற வகையைச் சேர்ந்த விமானத்தில் 3 விமானிகள், 5 சிப்பந்திகள், விமானப்படை வீரர்கள் என 92 பேர் பயணித்தனர்.

சுலு மாகாணத்தில் உள்ள மலைகள் நிறைந்த பகுதியில் விமானத்தை தரையிறக்க முயன்றபோது திடீரென விமானம் விழுந்து நொறுங்கியது.

அடுத்த சில நிமிடங்களிலேயே விமானம் தீப்பிடித்து எரிந்தது. அதனால் அந்த இடம் முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. விமானத்தில் பயணித்தவர்களின் அலறல் குரல் மலைகளில் எதிரொலித்தது.

View of the site after a Philippines Air Force Lockheed C-130 plane carrying troops crashed on landing in Patikul, Sulu province, Philippines July 4, 2021. Armed Forces of the Philippines – Joint Task Force Sulu/Handout via REUTERS

விமானம் விபத்தில் சிக்கிய தகவல் தெரிந்ததும் மீட்பு பணியில் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர். உயிருக்குப் போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் 45 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விமானம் விபத்தில் சிக்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே வீரர்களில் சிலர் குதித்ததால் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர். இந்த ரக விமானம் அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்பட்டது. ராணுவ உதவிக்காக இந்த ஆண்டுதான் பிலிப்பைன்ஸ் அரசு பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *