கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா (நோய் எதிர்ப்பு சக்தி) எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது நல்ல பலன் அளிக்கிறது. தலைநகர் டெல்லியில் முதல் பிளாஸ்மா வங்கி அண்மையில் தொடங்கப்பட்டது.
இதற்கு அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.