ரூ.50-க்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம், மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிவிசி பிளாஸ்டிக்கால் ஆன ஏடிஎம் வடிவிலான ஆதார் அட்டைகள் ரூ.30 கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்தன.
இந்த ஆதார் அட்டைகளில் இருந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய முடியாததால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது யுஐடிஐஏ நிறுவனமே ஏடிஎம் வடிவிலான பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது.
இந்த அட்டையின் இருபுறமும் வண்ண வடிவில், அசல் என்பதற்கான நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான ஹாலோகிராம், ஆதார் லட்சினையை தொட்டு உணரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த ஆதார் அட்டையை https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து பெறலாம். இந்த அட்டைக்கான கட்டணம் ரூ.50 ஆகும். இது மழையில் நனைந்தாலும் எதுவும் ஆகாது என்று யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.