11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ் 2-ல் சேர்ந்து படிக்கலாம்

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதுதொடர்பாக கோபிசெட்டி பாளையளத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.


அவர் கூறுகையில், “11-ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டே தோல்வியடைந்த பாடங்களுக்கான தேர்வை எழுதலாம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *