பிளஸ் 11 பொதுத்தேர்வு முடிவுகள் 31-ம் தேதி வெளியீடு

பிளஸ் 11 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 31-ம் தேதி வெளியாகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவ, மாணவியர் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து முடிவுகளை அறியலாம்.


மேலும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *