ஜூலை 25 முதல் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள் ஜூலை 24 முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அவரவர் படித்த பள்ளிகள் மூலமும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


விடைத்தாள் நகலை பெற பாடம் ஒன்றுக்கு ரூ.275, மறுகூட்டலுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305 கட்டணம்.

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை ஜூலை 25 முதல் 30-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *