பிளஸ் 2 மாணவர்களுக்கு அக். 14 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பினை அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ளார்.
“மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 அரியர்), இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) வருகிற 14ம் தேதி வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம்” என்று உஷா ராணி தெரிவித்துள்ளார்.