பிளஸ் 2 தேர்வுக்கு தனியார் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் பிப். 27 முதல் மார்ச் 6 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச் 8, 9-ம் தேதிகளில் தட்கல் திட்டத்தில் ரூ.1,000 கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். முதன்மை மாவட்ட கல்வி அலுவலர், அரசு தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களையும் அணுகலாம் என்று அரசு தேர்வு துறை இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.