பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ல் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, “மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.


நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை வரும் 13- ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அவரவர் பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் 10 -ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *