பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16-ல் தொடக்கம்

பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16-ல் தொடங்குகிறது என்று தமிழக அரசின் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மட்டும் வரும் மே 3-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *