பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு..

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு வரும் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி இன்று விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு துணைத் தேர்வுகள் வரும் செப்டம்பரில் நடைபெறுகிறது.

தனித்தேர்வர்கள், பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த, வருகைப் புரியாத தேர்வர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ‘மார்ச் 2020’ எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், துணைத் தேர்வை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

மார்ச் 2020 பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும், 2020-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அரசு தேர்வுகள் இயக்ககம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அரசு தேர்வுகள் இயக்ககம்

துணைத் தேர்வு எழுத கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் வருகிற 24 முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், மார்ச்-2020 பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாதவர்கள், தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கும் வருகிற 24 முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான துணைத்தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரையிலும், பிளஸ்-2 வகுப்புக்கு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையிலும் நடைபெறும்” என்று உஷாராணி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டன.

இதன்அடிப்படையில் கடந்த 10-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநர் உஷா ராணி அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

சான்றிதழில் பிழைகள் இருந்தால் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *