உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி

உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம் இதழ் சார்பில் ஆண்டுதோறும் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பட்டியலை டைம் இதழ் இன்று வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் வெளியான ‘டைம் 100’ பட்டியலில் பிரதமர் மோடி இடம்பிடித்தார். தற்போது 4-வது முறையாக டைம் இதழில் அவர் இடம்பிடித்திருக்கிறார்.

டெல்லி ஷாகின்பாத்தில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது மூதாட்டி பில்கிஸும் டைம் இதழ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எச்ஐவி வைரஸ் ஆராய்ச்சியாளர் ரவீந்திர குப்தா, தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் ‘டைம் 100’ பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்க ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரும் சென்னையை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல்,அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் ஆகியோரும் டைம் இதழ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *