வெளிப்படையான வரி விதிப்பு..நேர்மைக்கு மரியாதை.. இதென்ன புதிய திட்டம்? பிரதமர் மோடியின் அறிவிப்பு என்ன?

வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மைக்கு மரியாதை” என்ற வரி சீர்த்திருத்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் முகமில்லா மதிப்பீடு, முகமில்லா மேல்முறையீடு உள்ளிட்ட சீர்திருத்தங்கள் அமல் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.


சில ஊடகங்கள் வருமான வரி தாக்கலுக்காக புதிய இணைய தளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வேறு சில ஊடகங்கள் ஏதோ ஒரு திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் புரிந்தும் புரியாமலும் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் தொடங்கி வைத்துள்ள புதிய வரி சீர்திருத்த திட்டத்தை தெளிவாக புரிந்து கொள்ள சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியமாகிறது.


மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்ற பிறகு வருமான வரித் துறை அதிகாரிகள் பலருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அதாவது லஞ்சம், ஊழல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய மூத்த அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு சீர்திருத்தங்களை அமல் செய்தது.

வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மைக்கு மரியாதை" புதிய திட்ட விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மைக்கு மரியாதை” புதிய திட்ட விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதில் முக்கியமானது, வருமான வரி சார்ந்த முறையீடுகளுக்கான நிதி வரம்பு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. அதாவது வருமான வரி தொடர்பான விவகாரங்களில் தீர்ப்பாயத்தின் முன்பு மேல்முறையீடு செய்ய 50 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு, ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல 2கோடி ரூபாய் வரிஏய்ப்பு என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.


வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்படும் வருமான வரி படிவங்களில் சந்தேகத்துக்குரிய படிவங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். வருவாயில் முரண்பாடு இருந்தால், வரிஏய்ப்பு செய்து அரசை ஏமாற்றுவது தெரியவந்தால் வருமான வரித் துறை சார்பில் தீர்ப்பாயம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.


ஆரம்ப காலத்தில் சிறிய தொகைக்குகூட வருமான வரித் துறை சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன்மூலம் வருவாய் துறை அதிகாரிகள் ஆதாயம் அடைந்ததாக புகார்கள் எழுந்தன. நேர்மையாக வரி செலுத்துவோர் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க தீர்ப்பாயம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் வருமான வரி துறை சார்பில் வழக்கு தொடர குறிப்பிட்ட தொகை அடிப்படை வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது.

"வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மைக்கு மரியாதை" திட்ட தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்ற அதிகாரிகள்.
“வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மைக்கு மரியாதை” திட்ட தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்ற அதிகாரிகள்.


மேலும் லஞ்ச, லாவண்யத்தை தடுக்க வரி செலுத்துவோர், வருமான துறை அதிகாரிகள் நேரடி சந்திப்பதை தடுக்க வருமான வரித் துறையில் புதிய நடைமுறை அமல் செய்யப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி படிவத்தை ஓர் அதிகாரி ஆய்வு செய்யும்போது, அந்த படிவம் யாருடையது என்ற தகவல் மறைக்கப்படும். வரிசெலுத்துவோரின் மேல்முறையீடு விவகாரத்திலும் இதே அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரி லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
இதைதான் முகமில்லா மதிப்பீடு என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார். வரி செலுத்துவோரின் முகம், வருமான வரி அதிகாரிக்கு தெரியாது. அதேபோல எந்த அதிகாரி தன்னுடைய விவகாரத்தை கவனிக்கிறார் என்பது வரி செலுத்துவோருக்கு தெரியாது.


பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசும்போது, நாட்டின் மக்கள் தொகை 150 கோடி. இதில் ஒன்றரை கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். எனவே பொதுமக்கள் மனசாட்சியின்படி வரி செலுத்த வேண்டும் என்று கண்டிப்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். இது உன்னிப்பாக கவனிக்க வேண்டியதாகும். வரும் காலத்தில் வரி செலுத்தாமல் ஏய்த்து வருவோரை பிடிக்க கெடுபிடிகள் அமலாகலாம்.

உள்ளடக்கி "வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மைக்கு மரியாதை" புதிய திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற தொழிலதிபர்கள்.
உள்ளடக்கி “வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மைக்கு மரியாதை” புதிய திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற தொழிலதிபர்கள்.


கடந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி வரிவிதிப்புக்குரிய வருமானம் 5 லட்சம் வரை இருந்தால் வருமான வரி கிடையாது. 5 லட்சத்தை தாண்டினால் 2.5 லட்சம் வரை வரிவிலக்கு வழங்கப்படும்.

2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5 சதவீத வரி, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10 சதவீத வரி, 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 15 சதவீத வரி, 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20 சதவீத வரி, 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 25 சதவீத வரி, 15 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

புதிய வரிவிதிப்பு நடைமுறையில் எவ்வித வரிச் சலுகையும் வழங்கப்படாது.தற்போது நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு அல்லது புதிய வரிவிதிப்பு முறைகளில் எது சாதகமோ அதை பொதுமக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.இவை உட்பட பல்வேறு வரி சீர்த்திருத்தங்களை உள்ளடக்கி “வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மைக்கு மரியாதை” என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *