இந்திய இளைஞர்களின் புதுமையான திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அரசுத் துறையின் பிரச்சினைகள், சவால்கள் இளைஞர்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு இளைஞர்கள் தீர்வு சொல்கின்றனர்.
இந்த ஆண்டு இந்த போட்டியில் நாடு முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் மத்திய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 243 பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு ஏராளமான இளைஞர்கள் தீர்வு சொன்னார்கள்.

இந்த பின்னணியில் “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2020” போட்டியின் இறுதிச் சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார். அதோடு இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றுகிறார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் நேர்மறையான, எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துகளை எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.