சூழ்நிலைக்கு ஏற்ப திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.


உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:


உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்றுநோய் பரவி உள்ள இந்த நேரத்தில், வேலை கலாச்சாரத்துடன், வேலையின் தன்மையும் மாறிவிட்டது. எப்போதும் மாறிவரும் புதிய தொழில்நுட்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காலங்களில் இளைஞர்கள் புதிய திறன்களைப் பெறுகின்றனர்.


திறன் என்பது நாம் நமக்கு நாமே கொடுக்கும் பரிசு, அது அனுபவத்துடன் வளர்கிறது. திறன் தனித்துவமானது, இது உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. கால சூழ்நிலைக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறமையை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். வேலை வாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது. வேலை மட்டுமின்றி செல்வாக்கு ஊக்கத்தையும் திறன் வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *