கொரோனா தடுப்பூசி.. பிரதமர் ஆய்வு…

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக பிரதமர் ஆய்வு செய்தார்.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வருகிறது. 

இது இருமுறை போட வேண்டிய தடுப்பூசியாகும். இந்த நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் இந்தியாவுக்கும் 50 சதவீதம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. ஆண்டுக்கு 300 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்போம் என்று செரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம் ‘கோவேக்ஸின்’ என்ற பெயரில் கொரோனா மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்து தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இது மூக்கின் வழியை ஊறிஞ்சும் மருந்தாகும். 

குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா நிறுவனம்  ‘ஜைகோவ் டி’  என்று பெயரில் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி 3 முறை போட வேண்டிய தடுப்பூசியாகும். அடுத்த ஆண்டு மார்ச்சில் ஜைகோவ் டி தடுப்பூசி சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதலில் அகமதாபாத் சென்றார். அங்கு ஜைடஸ் கேடில்லா ஆலைக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை பார்வையிட்டார். பின்னர் ஹைதராபாத் சென்ற அவர் பாரத் பயோ டெக் ஆலைக்கு சென்று கோவேக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து குறித்து கேட்டறிந்தார்.

இறுதியாக மகாராஷ்டிராவிந் புனே நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, செரம் இன்ஸ்டிடியூட் ஆலைக்கு சென்று அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரானதும், அவற்றை உற்பத்தி செய்யும் ஆலையிடம் இருந்து மத்திய அரசு மொத்தமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும். பின்னர் கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கும்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளன. முதலில் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *