போக்கோ புதிய பட்ஜெட் போனான போக்கோ சி31ஐ அறிமுகப்படித்தியுள்ளது. இந்த போன் மீடியாடெக் சிப்செட்டைப் கொண்டுள்ளது. மற்றும் மூன்று கேமரா லென்ஸ்களைக் கொண்டுள்ளது.
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ள போக்கோ சி31 வேரியன்ட் ₹ 8,499 விலையில் தொடங்குகிறது . 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட்டின் விலை ₹ 9,499. ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனையில் இந்த போன் கிடைக்கும்(3 அக்டோபர் ). போக்கோ சி 31 க்கான அறிமுக சலுகை 3 ஜிபி ரேம் வேரியண்டிற்கு ₹ 7,999 மற்றும் 4 ஜிபி ரேம் வேரியண்டிற்கு ₹ 8,999.
இந்த போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 ப்ராசசர் மூலம் 64 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் பிரத்யேக மெமரி ஸ்லாட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 13 மெகா பிக்ஸ்எல் பிரைமரி லென்ஸுடன் மூன்று லென்ஸ் கேமராவைப் பெறுகிறது. இது 5000 mAh பேட்டரி-ஐ கொண்டுள்ளது.